electricaldatacablingArchitectureAbkout usHome  
House cabling plan
 

 

 

 

மின்னிணைப்பு திட்ட வரைபடம்

வீட்டிற்கான கணினி கேபிலிங்

பசுமைக் கட்டிடம்

பிளம்பிங் திட்ட வரைபடம்

மீன் தொட்டி தோட்டம்

 

 

Our Services

Search in DesignWiring

 

 

 

Electrical plan

 

வீடு கட்டும்போது திட்டமிடல் என்பது மிக அவசியமா? ஏன்?

 

எந்தவித திட்டமிடல் இல்லாமலும் ஒரு வீட்டை கட்டி முடிக்கலாம். ஆனால் அது குலுக்கலில் கிடைக்கும் பரிசு போல, ஒரு வேளை சில பணிகள் நல்ல தரத்துடன் முடிக்கப் பட்டிருக்கும், ஆனாலும் அதைவிட நல்ல புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்காது. மேஸ்திரி தனக்கு தெரிந்ததை கொண்டு மட்டுமே செய்ய முடியும். அல்லது வீட்டு சொந்தக்காரரின் அல்லது கட்டுபவரின் ரசனைக் கேற்ப அமைந்திருந்தாலும், தரமோ அல்லது செலவோ அதிகம் ஆகியிருக்கலாம். அல்லது ஏதாவது வசதி குறைவு இருக்கும் அது பிற்பாடு மறுபடியும் வேலை செய்ய வேண்டியது வரலாம். பெரும்பாலும் வீடு கட்டி முடித்த பிறகு இதை செய்திருக்காலாமே, எது தெரியாமல் போய் விட்டதே என்று வருத்தப்படுவதை விட முன்பே திட்டமிட்டு ஒவ்வொரு வேலைக்கும் வரைபடம் தயாரிப்பது நல்லது.

ஒரு எலக்ட்ரீசியனோ, பிளம்பரோ தனக்கு தெரிந்த அல்லது, எளிதாக வேலை முடியக்கூடிய வகையிலேதான் தனது வேலையை செய்வது நடைமுறை உண்மை. ஆகவே கட்டுமானப் பணியை மேற்கொள்பவரிடமோ, வேலை செய்பவர்களிடமோ நீங்கள் உங்கள் வீட்டு வேலையை ஒப்படைக்கும் போது, அது எந்த அளவு தரமானது? எந்த அளவு தற்கால தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது? எந்த அளவு தொலை நோக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? இதற்காகவே நாமக்கு திட்டமிடல் தேவை. ஆனால் இந்த திட்டமிடல் நீங்களாகவே செய்வதை விட இத்துறையில் தனித்திறமை மற்றும் அனுபவம் உள்ளவர்களோடு இணைந்து செய்வதே சிறந்த பயனைக் கொடுக்கும்.

வீட்டு கட்டுமான வரைபடம், தள வரைபடம், மிணினைப்பு திட்ட வரைபடம், டிஜிடல் திட்ட வரைபடம், பிளம்பிங் திட்ட வரைபடம் போன்றவை சரியானபடி தயாரிக்கப் பட்டால்தான் இந்த வேலைகள் எல்லாம் சரியான தரத்தோடு செய்யப்படும். ஏனென்றால் தங்களது எந்த ஒரு வேலையையும் தரமானதாகவோ , சரி என்றே தான் பொதுவாக எல்லோரும் சாதிப்பார்கள். ஆகவே இது போன்ற வாதங்களை தவிர்க்கவும் நமது வீட்டின் ஒவ்வொரு வேலையும் சிறந்த முறையில், தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைக்கப்படவும், திட்ட வரைபடத்தின் படிதான் செய்தாக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.  “Design Wiring”  உங்களுக்கு இந்த எல்லா திட்ட வரைபடங்களையும் , திட்டமிடலையும் ஆலோசனைகளையும் வழங்குகிறோம். தேவைப்பட்டால் எலக்ட்ரீசியன் மற்றும் கட்டுமான பொறியியலாளர்களுக்கு ஆலோசனை, வழிநடத்தல், மற்றும் மேற்பார்வை பார்த்தலையும் வழங்குகிறோம்.

 

எங்களது சேவை:

மின்னிணைப்பு திட்ட வரைபடம் தயாரித்தல்

கணினி கேபிலிங் திட்ட வரைபடம்

வரைபட திட்டம்.

பிளம்பிங் வரைபட திட்டம்.

பசுமை வீடு திட்ட வரைபடம்

கட்டுமான இடத்தில் மேற்பார்வை மற்றும் ஆலோசனைகள்

 

 

Why Do You Need Electrical and Structured cable Planning?

Basic Electrical Safety

 

 

 

Data cabling